அதிகரித்துள்ள காற்று மாசு: டில்லியில் 3 நாட்கள் கனரக வாகனங்கள் இயக்க தடை

டில்லி:

லைநகர் டில்லியில் காற்று மாசு அபாயகரமான அளவில் உள்ளதால், 3 நாட்கள் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்தும் கனரக வாகனங்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசு காரணமாக டில்லி, உ.பி. போன்ற மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 6ந்தேதி மற்றும் 7ந்தேதி தீபாவளி பண்டிகைக்கு பிறகு டில்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. டில்லியில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று உச்சநீதி மன்றம் உத்தர விட்டும், அதை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டி உள்ளது.

காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ள நிலையில், பனிமூட்டமும் காணப்படுவதால், பொதுமக்கள் மூச்சுவிடுவதில் கூட கடும் சிரமம் அடைந்துள்ளனர். பனி கலந்த மாசு, சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால், பகல் நேரங்களிலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி செல்கின்றனர்.

இந்நிலையில்  நேற்றிரவு 11 மணி முதல் சரக்கு லாரிகள், டேங்கர் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு வேறு பகுதிகளுக்குத் திருப்பி விடப்படுகின்றன. மேழலும் கனரக வாகனங்களுக்கு 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டில்லி யின் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இதுபோல வட மாநிலங்களில் உச்சநீதி மன்ற தீர்ப்பை மீறி பட்டாசுகள் கொளுத்தப்பட்ட தால், காற்று மாசு அதிகரித்து  அங்கு வசிப்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Entry of medium, Heavy Air pollution in delhi, heavy goods vehicles banned in Delhi for 3 days, அதிகரித்துள்ள காற்றுமாசு: டில்லியில் 3 நாட்கள் கனரக வாகனங்கள் இயக்க தடை
-=-