10வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை: முதன்முறையாக சென்னை அரசு மருத்துவர்கள் சாதனை

இருதயம் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுவனுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மருத்துவர்கள்

சென்னை:

சென்னை அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்க  இருதய மாற்று அறுவை சிகிச்சையை முதன்முறையாக  அரசு மருத்துவர்கள்  வெற்றிகரமாக நடத்தி  சாதனை படைத்துள்ளனர்.

இதுவரை தனியார் மருத்துவமனையில் நடைபெற்று வந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை தற்போது அரசு மருத்துவமனையில் முதன்முறையாக வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் பிரவீன் இருமல் மற்றும் மூச்சுத்திணறல் காணமாக அவதிப்பட்டு வந்த அவனை சென்னை குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வு செய்தபோது, சிறுவனது இருதயம் பலவீனமாக இருப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து,  மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு,  மூளைச்சாவு அடைந்த 25 வயது வாலிபரிடம் இருந்து இருதயம் பெறப்பட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு நடந்தது.

கடந்த மாதம் 24-ந் தேதி பிரவீனுக்கு இருதயம் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 4 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

தற்போது சிறுவன் நலமுடன் இருக்கிறான். இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மருத்துவர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 10வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை: முதன்முறையாக சென்னை அரசு மருத்துவர்கள் சாதனை, Heart Transplant Surgery for the First time in chennai government hospital
-=-