கடலூர்: 
ங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் இன்று கரையைக் கடக்க உள்ளதால் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூர், ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் கடந்த 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருமாறியது. குலாப் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புயல், மேற்கு நோக்கி நகர்ந்து இன்று கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.