டில்லி,

டந்த ஆண்டு மத்திய அரசு நாடு முழுவதும்  ஒரே வகையான வரிதிப்பான  ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்தியது.

தொடக்கத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் அமோகமாக நடைபெற்று வந்தது. ஆனால், பின்னர்  கடந்த ஆண்டு  அக்டோபர், நவம்பர் மாதங்களில் வரி வருவாய் குறைந்தது. இதுகுறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் மீண்டும் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

அதன்படி கடந்த டிசம்பரில், நாடு முழுவதும் இருந்து ஜிஎஸ்டி வரியாக,  86,703 கோடி வசூலாகி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 92,150 கோடி ரூபாய்  வசூலானது. ஆனால்,  அக்டோபர் மாதம், 83 ஆயிரம் கோடி ரூபாயாகவும், நவம்பர் மாதம்  80,808 கோடி ரூபாயும் வசூலானது. இது செப்டம்பர் மாதத்தை விட குறைவு.

இந்நிலையில், கடந்த டிசம்பர்  வரி வசூல் மீண்டும் உயர்ந்து,  86,703 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.