டெல்லி: ஜிஎஸ்டி வரலாற்றில் முதன்முறையாக,  இதுவரை இல்லாத அளவ  மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில், சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 2017ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. அன்றுமுதல் இன்று வரை, சாமானிய மக்களின் வயிற்றில் அடித்து, தொடர்ந்து வசூலை வாரிக் கொண்டிக்கொண்டிருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சற்று வரி வசூல் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,40,986 கோடி வசூலான நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.33 லட்சம் கோடிதான் வசூலானது. இந்த நிலையில், கடந்த மாத (மார்ச்) ஜிஎஸ்டி வசூலானது இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது ஜிஎஸ்டி வரலாற்றில் புதிய உச்சம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

மார்ச் மாத ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ. ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 095 வசூலாகி உள்ளது.

இதில், சி.ஜி.எஸ்.டி ரூ. 25,830 ஆகும், எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 32,378 ஆகவும் ஐ.ஜி.எஸ்.டி ரூ.74,470- ஆகும்.

அத்துடன், செஸ் வரி மூலம் ரூ.9,414 கோடி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி தொகையை விட நடப்பு ஆண்டு 15 சதவீதம் கூடுதாலக கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் இயல்புநிலை திரும்பி உள்ளதால்,   தொழிற்சாலை  நடவடிக்கைகளும் கொரோனாவுக்கு முந்தைய கால அளவுக்கு உற்ப்த்தியை அதிகரித்துள்ளன. இதானால், ஏற்றுமதி, இறக்குமதியும் இயல்பான அளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி வரி வசூலும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.