இந்தியாவின் ஜிசாட்–11 செயற்கைகோள் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

டில்லி:

ந்தியாவில் அதிவேக இணைய தள சேவைக்காக இஸ்ரோ 5,854 கிலோ எடையில் ‘ஜிசாட்–11’ என்ற அதி நவீன செயற்கைகோளை தயாரித்து உள்ளது.

கடந்த மே மாதமே இந்த செயற்கைகோளை விண்ணில் செலுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது ஜி சாட்-11 செயற்கைக்கோள் தயாரிப்பு பணி முழுமையாக நிறைவடைந்து விட்டது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கயானாவில் இருந்து ‘ஏரைன்–5’ என்ற ராக்கெட் மூலம் 5-ம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 2.07 மணி முதல் 3.23 மணிக்குள் ‘ஜிசாட்–11’ செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ஜி சாட்-11 செயற்கை கோளில் 40 அதிநவீன டிரான்ஸ்பாண்டர்கள் இடம் பெற்றுள்ளன. இதனால் இணையத்தள வேகம் கூடுதலாக கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

Tags: GSAT-11, இந்தியாவின் ஜிசாட்–11 செயற்கைகோள் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது