வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-11!

டில்லி:

ந்தியாவின் அதிக எடைக் கொண்ட செயற்கைகோளான ஜிசாட் 11 இன்று அதிகாலை 2.07 மணியளவில் பிரெஞ்ச் கயானாவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் வெற்றிக்கரமாக நிலைநிறுத்தப்பட்டது.

 

ஏரியன்ஸ்பேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஜிசாட் 11 செயற்கைகோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இத்துடன் தென்கொரியாவின் புவி ஆய்வு செயற்கைகோளான ஜியோ-காம்ப்சாட்-2A-ம் செலுத்தப்பட்டது.

தொலைத்தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்காகவும், கடல் சார் ஆய்வுகளுக்காகவும் பல்வேறு செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. அந்த வரிசையில் அதிவேக இணையதள சேவைகளை கொண்ட ஜிசாட் 11 என்ற செயற்கைகோளை விஞ்ஞானிகள் வடிவமைத்தனர்.

கடந்த மே மாதமே ஜிசாட் 11 செயற்கைகோளை விண்ணில் செலுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்திருந்தனர். ஆனால், ஜிசாட்-6ஏ செயற்கைகோள் செலுத்தப்பட்டதால் ‘ஜிசாட்-11’ செயற்கைகோள் ஒத்தி வைக்கப்பட்டடது.

ஜிசாட்-11 செயற்கைகோள் 5,854 கிலோ எடை கொண்டது. இஸ்ரோ தயாரித்த செயற்கைக்கோள்களிலேயே அதிக எடை கொண்டது இதுதான். இதன் மூலம் இந்தியாவிலும் அருகில் உள்ள தீவுகளிலும் இணையதள வேகம் அதிகரிக்கப்படும். இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகளாகும். இதில் 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்டன.

அடுத்த ஆண்டில் ஜிசாட்-20 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

ஏற்கனவே ஏவப்பட்ட ஜிசாட்-19, ஜிசாட்-29 ஆகிய இரண்டு செயற்கைகோள்கள், தற்போது செலுத்தப்பட்டுள்ள ஜிசாட்-11 மற்றும் அடுத்தாண்டு ஏவப்படும் ஜிசாட்-20 செயற்கைகோள் ஆகியவற்றின் மூலம் விநாடிக்கு 100 ஜிகாபைட் வேகத்தில் இணையதள சேவையை வழங்க முடியும் என்றும் கே.சிவன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: GSAT-11, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-17