நவம்பர் 11-ல் குரூப்-2 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை:

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வுகள் நவம்பர் 11-ந்தேதி  நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியிளர் தேர்வாணையம் அறிவித்துஉள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம்  மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பபடுகிறது. இதற்காக குருப் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி  நடத்தி வருகிறது. இந்த வருடம் நடைபெற இருக்கும் குருப்-2 தேர்வு விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் 23 பிரிவுகளில்  காலியாக உள்ள 1199 காலி பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வுகள் வரும் நவம்பர் 11-ல் நடைபெறும் என்று தேர்வாணையம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பம் டி.என்.பி.எஸ்.சியின் இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்க லாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறுவது எப்படி?

குரூப்-2 ஏ பணிக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 100 கேள்விகளும் (75 வினாக்கள் பொது அறிவு, 25 வினாக்கள் திறனறிதல் (Mental Ability and Aptitude), பொது ஆங்கிலம் அல்லது பொதுத் தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகளும் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும்

டிஎன்பிஎஸ்சி2 தேர்வு மூலம்  தலைமைச் செயலகம், டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம், சட்டப்பேரவை செயலகம் ஆகியவற்றில் உதவியாளர்கள், கணக்கு மற்றும் கருவூலத்துறையில் கணக்கர் மற்றும் நேர்முக எழுத்தர் நேரடியாக நிரப்பப்பட உள்ளன.

தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை உதவியாளர் பணிக்குப் பி.எல். பட்டமும், அதேபோல், நிதித்துறையில் உதவியாளர் பணிக்குப் பி.ஏ. பொருளாதாரம் பி.காம். அல்லது புள்ளியியல் பட்டமும் அவசியம். மற்றப் பணிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு போதும்.

தேர்வில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். பொது அறிவுப் பகுதியானது, பட்டப் படிப்பில் தரத்தில் அமைந்திருக்கும். திறனறிதல் மற்றும் பொதுத் ஆங்கிலம், பொது தமிழ் பகுதிகள் 10-ம் வகுப்பு தரத்திலும் இருக்கும்.

பொதுத் ஆங்கிலம், பொது தமிழ் – இதில் விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு பகுதியைத் தேர்வுசெய்துகொள்ளலாம். இது பற்றி விண்ணப்பிக்கும்போதே குறிப்பிட்டுவிட வேண்டும்.

Tags: Group-II examination on November 11: TNPSC Announced, நவம்பர் 11-ல் குரூப்-2 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு