சென்னை: தென்சென்னையின்  குப்பைக்கிடங்ககாக உள்ள  பெருங்குடி குப்பைக் கிடங்கு மற்றும் வடசென்னையின் குப்பை கிடங்காக உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்குகளால், அந்த பகுதி நிலத்தடி நீர்  பாதிக்கப்பட்டு உள்ளதாக  பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர்.

சென்னையின் சாபக்கேடாக அமைந்துள்ளது வடசென்னையின் கொடுங்கையூர் குப்பை கொட்டும் இடமும்,  தென்சென்னையின் பெருங்குடி குப்பை கிடங்கும். இங்கு தினசல பல நூறு டன்கள் குப்பை கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளை மறுசுழற்றி செய்து உரமாக தயாரிப்பதாக சென்னை மாநகராட்சி கூறி வந்தாலும், அந்த பணிகள் ஆமைவேகத்தில்தான் செயல்பட்டு வருகின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்கனபோ, குப்பைகளை அகற்ற முறையான நடவடிக்கை எடுக்காததால்,  அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும்,  நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

வட சென்னையில் இருக்கும் கொடுங்கையூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கு கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இதன் மொத்தப் பரப்பளவு 270 ஏக்கர். இங்கே ஒரு நாளைக்கு 3 ஆயிரத்துக்கும் மெட்ரிக் டன் வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன.

அதேபோல பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியிலிருக்கும் பெருங்குடி குப்பைக் கிடங்கு, 1988-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவருகிறது. இதன் பரபரப்பளவு 228 ஏக்கர். இங்கே ஒரு நாளைக்கு 3000 மெட்ரிக் டன் வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன.

பெருங்குடி குப்பைமேடு பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் இருக்கிறது. அங்கே குப்பைகளைக் கொட்டுவது அநியாயத்தின் உச்சம். சதுப்புநிலம் என்பது ஓர் உயிர்ச்சூழல். பல்லுயிர்கள் வாழும் பகுதி. அரிதாக இருக்கும் நன்னீர் சதுப்புநிலம். மழை, வெள்ள நீரைத் தேக்கிவைக்கும் இடம். இந்தப் பகுதி மற்ற இடங்களைவிட, பத்து மடங்கு அதிகமாகத் தண்ணீரை உறிஞ்சி சேமிக்கிறது. இந்தக் குப்பைக் கிடங்கால், அந்தப் பகுதியின் நிலப்பரப்பும், நிலத்தடி நீரும் மிக மோசமாக மாசடைந்திருக்கின்றன.

 “பெரிய குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படும் குப்பைகளில் இருக்கும் வேதிப் பொருள்கள், கரிமப் பொருள்கள், மழைநீருடன் கலந்து, கீழே வடியும்போது கறுப்பு நிறத்தில் இருக்கும். அதை `லீச்சேட்’ (Leachate) என்று சொல்வார்கள். இந்த நீர், நிலத்தடி நீரில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளது,  மாசு  கலந்த நிலத்தடி நீரைக் குடித்தால் புற்றுநோய் வரவும் வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும்  இதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உயிரையே பறிக்கும் நோய்கள் பரவி வருகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதனால் பெருங்குடி குப்பை கிடங்கை மூட வேண்டும் என்றும், அங்கு குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும், பெருங்குடி, துரைப்பாக்கம் உள்பட அதை சுற்றி உள்ள ஊர் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதுபோல, கொடுங்கையூர் குப்பை கிடங்கை மூடிவிட்டு, நகரத்துக்கு வெளியே புதிய குப்பை கிடங்கை அமைக்க வேண்டும் என வடசென்னை மக்கள் கூறி வருகின்றனர்.

குப்பையினால் ஏற்படும் பாதிப்பு குறித்த ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலரும் பொதுமருத்துவரான டாக்டர் எழிலன் (தற்போது திமுக எம்எல்எ) இந்த  குப்பைக் கிடங்குகளால், அதன்  அருகில் வசிப்பவர்களுக்கு, நான் அந்தப் பகுதியில் மூன்று முறை ஆய்வு செய்திருக்கிறேன். அங்கே வசிக்கும் மக்கள் கிருமிகளால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு, கூட்டம் கூட்டமாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். மற்ற இடங்களில் பெரும்பாலும் இதுபோன்ற நோய்கள் பரவுவது இல்லை. இங்கே வசிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சருமப் பிரச்னைகள் இருக்கின்றன. 2

“ஈக்கள் மற்றும் சிறு பூச்சிகள் பரப்பும் கிருமிகளால் பரவும் தொற்றுநோய்களான காலரா, வயிற்றுப்போக்கு, அமீபியாஸ் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

குடிநீரில் குப்பைக் கழிவுநீர் கலப்பதால், மஞ்சள்காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற மோசமான பாதிப்புகள் ஏற்படலாம். அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேறும் மீத்தேன் போன்ற வாயுக்களால், நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசக் கோளாறுகள் உண்டாகும்.

குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, ஐ.எல்.டி (ILD – Interstitial Lung Disease) – நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு வரலாம்.

20 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வசிக்கும், அந்தப் பகுதிக்குச் சென்று வருபவர்களுக்கு மீத்தேன், சல்பர் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களால் ரத்தக்குழாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய்கள் ஏற்படலாம்.

ஆனால், அங்கே இதற்கான முறையான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. வெளிநாடாக இருந்தால், அந்தப் பகுதி மக்களை பத்து ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் வசிப்பவர்கள் என்று பிரித்து முறையாக ஆய்வு நடத்தி, கண்டுபிடித்து அதைச் சரி செய்திருப்பார்கள். அரசுதான் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதி மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

இதுபோன்ற இடங்களை `ஹாட் ஸ்பாட்ஸ்’ என்று கூறுவோம். இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களில் ஐந்து பேருக்காவது எப்போதும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் கண்டறியப்படுவது வேதனை அளிக்கிறது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.