புதுடெல்லி:
நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம் என்று டி.ஆர்.பாலு எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்த சென்ற தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்து விட்டார். 9 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு இருந்தும் அமித் ஷாவை சந்திக்க முடியாமல் தமிழ்நாடு எம்.பி.க்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக டி.ஆர்.பாலு பேட்டி அளித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஏற்கனவே தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் நீட் தேர்வு நடந்தது. இந்த நிலையில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழகத்தின்அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறைமந்திரி அமித்ஷாவை இன்று சந்தித்து பேச சென்றிருந்தார்.

நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்த சென்ற தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்து விட்டார்.

இதுகுறித்து டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவிக்கையில்,
9 நாட்களாக டெல்லியில் காத்திருந்தோம். இருப்பினும் அவரை சந்திக்க முடியாமல் தமிழ்நாடு எம்.பி.க்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.