வறான விளம்பரங்கள் வெளியாவதை  தடுத்து வரும் பிரபல இணையதள நிறுவனமான கூகுள் நிறுவனம், கடந்த ஆண்டு மட்டும் சுமார்  10லட்சம்  பேரின் கணக்குகளை முடக்கி உள்ளதாக அறிவித்து உள்ளது.

பிரபல தேடுதல் இணையதளமான கூகுளில் வாடிகைகயாளர்கள் விளம்பரங்கள் வெளியிடப்பட லாம். அதற்காக சில கட்டுப்பாடுகள் உள்ளன. இதையும் மீறி ஏராளமான பொய் விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன. இதை கூகுள் நிறுவனம் ஆய்வு செய்து முடக்கி வருகிறது.

கடந்த ஆண்டு (2018)  மட்டும்  2.3 கோடி தவறான விளம்பரங்களையும் தவறாக விளம்பரங்களை பயனடுத்திய  10 லட்சம்  விளம்பரதாரர்களின் கணக்கை கூகிள் நிறுவனம் முடக்கியுள்ளதாக அறிவித்து உள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டு  தடை செய்த எண்ணிக்கையைப் போல இரண்டு மடங்காகும்,

தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கும், அவர்களுடைய வியாபாரத்தினை மேமபடுத்தவும் இதுபோன்ற தவறான விளம்பரம் தருபவர்களையும் தடை செய்ததாக கூகுள் நிறுவனம்  தெரிவித்துள்ளது, அது மட்டுமல்லாமல் விளம்பரம் கொடுக்க 31 புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2018ல் தவறான விளம்பர அறிக்கையின் தகவல் மூலம் நாள்தோறும் 60 லட்சம் தவறான விளம்பரங்களை கூகிள் நிறுவனம் தடுத்து நிறுத்தியுள்ளது

தங்களுடைய சேவை மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையையும், அவர்களின் விளம்பரம் மூலம் அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக கூகிள் இருக்கும் என்றும், விளம்ப ரதாரர், விளம்பர பதிப்பாளர்  என தரப்பினரையும் தங்கள் தொழில்நுட்பம் மூல இணைப்ப தும்,தொடர்ந்து அவர்களோடு பயணிப்பதும் தங்கள் நிறுவனத்திந் நோக்கம் எனவும் கூகிள்  நிறுவனத்தின் விளம்பரத் துறை இயக்குநர் திரு.ஸ்காட் ஸ்பென்சர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்