கூகுள்-சாம்சங் கூட்டு முயற்சியில் புதிய மெசேஜிங் சர்வீஸ்….வாட்ஸ் ஆப்.க்கு மாற்றாக விரைவில் அறிமுகம்

சியோல்:

கூகுள் நிறுவனமும் சாம்சங் நிறுவனமும் இணைந்து வாட்ஸ் ஆப் சேவைக்கு மாற்றாக புதிய ஆர்சிஎஸ் என்ற மெசேஜிங் சேவையை தொடங்குகின்றன.

இது குறித்து சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கூகுள் நிறுவனத்துடன் இணைந்து வாட்ஸ் ஆப் செயலிக்கு மாற்றாக புதிய மெசேஜிங் சேவை தொடங்கபடவுள்ளது. இதற்கென்று தனி செயலி இல்லாமல் குரூப் சாட்டிங், வீடியோ கால், பெரிய அளவிலான கோப்புகள் பரிமாற்றம் போன்றவற்றை இதில் மேற்கொள்ளலாம்.

இது அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் பாரம்பரிய எஸ்எம்எஸ் மெசேஜிங் சேவையான வாட்ஸ் ஆப் மற்றம் வீசாட் போன்றவைக்கு மாற்றாக அமையும். ஆந்த்ராய்டு மற்றும் சாம்சங் மெசேஜிங் ஆகியவை இணைந்து எளிமையாக இதை உருவாக்கும். எஸ்எம்எஸ் மெசேஜிங்கிற்கு அடுத்தப்படியாக மேம்படுத்தப்பட்ட ஒரு முறையாக இது இருக்கும்.

இது ஆர்சிஎஸ் எனப்படும் ‘ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ்’ மூலம் அதிகப்படியான விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஏற்கனவே புழக்கத்தில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ் 8, எஸ் 8 பிளஸ் ஆகிய மாடல்களில் இருந்து இதை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. புதிய கேலக்ஸி ஸ்மார்ட் போன்களிலும் ஆர்சிஎஸ் மெசேஜிங்கை மேற்கொள்ளலாம். விரைவில் இந்த சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

Tags: Google anbd Samsung working on advanced messaging service to take on WhatsApp, கூகுள்-சாம்சங் கூட்டு முயற்சியில் புதிய மெசேஜிங் சர்வீஸ்....வாட்ஸ் ஆப்.க்கு மாற்றாக விரைவில் அறிமுகம்