புதுடெல்லி: இந்தியாவின் தங்க இறக்குமதி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், 94% அளவிற்கு சரிவை சந்தித்திருப்பதாக மத்திய வர்த்தக துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், தங்க இறக்குமதி அளவு 94% அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
இந்தக் காலாண்டில், 688 மில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி ஆகியுள்ளது. இந்திய மதிப்பில், இது கிட்டத்தட்ட ரூ.5,160 கோடியாகும். கொரோனா பரவலால் தங்கத்தின் தேவை குறைந்தது இந்த சரிவுக்கு காரணமாகும்.
ஆனால், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் தங்க இறக்குமதியானது 86 ஆயிரத்து 250 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் இறக்குமதி மட்டுமன்றி, வெள்ளி இறக்குமதியும் அந்த குறிப்பிட்ட காலாண்டில் 45% அளவுக்கு குறைந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளியின் மதிப்பு ரூ.4,300 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.