முதல்வர் பாரிக்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை: கோவா துணை சபாநாயகர் தகவல்

டில்லி:

ல்லீரல் புற்றுநோய் காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று கோவா சட்டமன்ற துணை சபாநாயகர் கூறி உள்ளார்.

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் ஏற்கனவே அமெரிக்காவில் 3 மாதங்கள் சிகிச்சை பெற்று கோவா திரும்பிய நிலையில், மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு எய்ம்ஸ் சிறப்பு மருத்துவ டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மனோகர் பாரிக்கரின் நண்பரும், கோவா மாநில சட்டமன்ற துணை சபாநாயகருமான, மைக்கேல் லோபோ மருத்துவமனை சென்று பரிக்கரின் உடல்நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மைக்கேல் லோபோ,  மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும், அவருடைய கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவதாக கூறினார்.

மேலும், அவரது  உடல்நிலையில் முன்னேறம் ஏற்பட வேண்டுமென்று அனைவரும் பிரார்த்தித்து வருகின்றனர் என்றால்,  அவரின் உடல்நிலை இன்று வரை பழைய நிலையில் தான் உள்ளது என்றார்.

இது கோவா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Goa Chief Minister Manohar Parrikar health does not have any progress: said Goa Deputy Speaker, முதல்வர் பாரிக்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை: கோவா துணை சபாநாயகர் தகவல்
-=-