பிரதோஷ மகிமை: 2019 ஆண்டின் பிரதோஷ நாட்கள் விவரம்….

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.

மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும்.

இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.

2019ம் ஆண்டு மே மாதம் 3 பிரதோஷங்கள் உயர்ந்த 2 சனிப்பிரதோஷங்கள் வருகின்றன 122 பிரதோஷம் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டவர்களுக்கு மறுபிறவி இல்லை முக்தியே இறைவன் சிவபெருமானின் திருவடி.  சிவனை நினையுங்கள் – சிவனை துதியுங்கள்- சிவயோகம் பெறுங்கள் !

2019ம் ஆண்டின் பிரதோஷ அட்டவணை:

3/1/2019 வியாழக்கிழமை பிரதோஷம்

18/1/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்

2/2/2019 சனிக்கிழமை சனிப்பிரதோஷம்

17/2/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

3/3/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் .

18/3/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்

2/4/2019 செவ்வாய்க்கிழமை பிரதோஷம் .

17/4/2019 புதன்கிழமை பிரதோஷம்

2/5/2019 வியாழக்கிழமை பிரதோஷம்

16/5/2019 வியாழக்கிழமை பிரதோஷம்

31/5/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம் .

14/6/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்

30/6/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

14/7/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

29/7/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்

12/8/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்

28/8/2019 புதன்கிழமை பிரதோஷம்

11/9/2019 புதன்கிழமை பிரதோஷம்

26/9/2019 வியாழக்கிழமை பிரதோஷம்

11/10//2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்

25/10/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம்

9/11/2019 சனிக்கிழமை சனிப்பிரதோஷம்

24/11/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்

9/12/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்

23/12/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம் .

சிவாயநம திருச்சிற்றம்பலம்.

:

Tags: 2019 ஆண்டு, Pradosham, Pradosham days of the year 201, Pradosham details, பிரதோஷ நாட்கள் விவரம்...., பிரதோஷ மகிமை