கொல்கத்தா: மேற்கு வங்கத்தில், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதால் சிறுமி பலியான வழக்கில், திரிணமுல் காங்., கட்சி பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பான பாஜக தலைமை 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வானதி சீனிவாசன், நடிகை குஷ்பு இடம் பெற்றுள்ளனர். குஷ்பு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கத்தின், நாடியா மாவட்டம் ஹன்ஸ்காலியில், திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவரது மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், அதே ஊரைச்சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். அதுபோல, அதே ஊரைச்சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி  ஒருவரும் கலந்துகொண்டார். இந்த மாணவி கடுமையான ரத்தப்போகு காரணமாக அடுத்த ஒருசில நாளில் மரணம் அடைந்தார்.
இதுகுறித்து அந்த  சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பின் வீடு திரும்பிய தங்களது மகள், வயிற்று வலி ரத்தப்போக்கு  உள்ளிட்ட உடல் பாதிப்புகளுடன் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,  அவரிடம் விசாரித்ததில், பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டபோது, திரிணமுல் காங்., கட்சி பிரமுகரின் மகன் மற்றும் நண்பர்கள் மதுகொடுத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது  என்று குற்றம் சாட்டினார். அவரை நாங்கள்  மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முன் இறந்துவிட்டார். அவரது உடலை உடனே எரிக்க நிர்ப்பந்தப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பஞ்சாயத்து தலைவர் சமர் என்பவரது மகன் சோஹைலை போலீசார் கைது செய்தனர். விசாரணையில்,  பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமியை அங்கிருந்த சோஹேல் மற்றும் அவரது நண்பர்கள் மது குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பின்னர் அவரது வீட்டில் இறக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சமர் கோவாலாவின் (Samar Goala) மகன் பிரஜ் கோபால் கோவாலாவை (21) (Braj Gopal Goala) போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எதிர்க்கட்சியினர்,  மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என  குற்றம் சாட்டி வருகின்றன்ர்.  இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி,” இந்த சம்பவம் பாலியல் வன்கொடுமையா? அல்லது கர்ப்பமா? அல்லது காதல் விவகாரமா? என விமர்சித்ததுடன்,  இது உண்மையிலேயே பாலியல் வன்கொடுமையா? அல்லது அந்த சிறுமி கர்ப்பமாக இருந்தாரா? அல்லது இது காதல் விவகாரமா? எனவும் அவர் கூறினார். இருவர் காதலித்துவந்தால் அதை நான் எப்படித் தடுத்து நிறுத்த முடியும்…

இது உ.பி அல்ல, நாங்கள் இங்கு லவ் ஜிகாத் செய்யவில்லை. இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். எங்கு குற்றம் நடந்தாலும் குற்றவாளிகளை காவல்துறையினர் கைதுசெய்வார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்திருக்கிறார்கள். காலையில் என்ன தலைப்பில் செய்தி வர வேண்டும் என்று பாஜக முடிவு செய்கிறது. அதைச் செய்தி சேனல்கள் பின்பற்றுகின்றன” என்று பேசியிருந்தார்.

மம்மதான் ஆணவனமான பதில் இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சையாக்கியது. மம்தாவின் கருத்துக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், டெல்லி வன்கொடுமை வழக்கில் உயிரிழந்த  நிர்பயாவின் தாய், மம்தா பானர்ஜி முதல்வராக தகுதியற்றவர் என்று காட்டமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, 5பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வானதி சீனிவாசன், நடிகை குஷ்பு இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் குஷ்பு  மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

சமீபத்தில்தான் குஷ்புதான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் தமிழச்சி என்றும் தமிழ் எனது தாய்மொழி போன்றது என கூறியிருந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தி மொழித் திணிப்பு கருத்துக்கு எதிராக பலரும் தொடர்ந்து கருத்துக்களைக் கூறி வந்தபோது,  நடிகை குஷ்புவும் தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், திமுகவைப் பொறுத்தவரை இந்தி எதிர்ப்பு என்று வந்தால் அதீதமாக நடந்து கொள்கிறது. உங்களுக்கு ஒரு மொழி மீது அத்தனை கோபம் இருந்தால் உங்களது எம்.பிக்களை இந்தி கற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறுங்கள். அவர்களுக்கு இந்தி தெரியாது என்பதை உறுதி செய்யுங்கள். இந்தியை யாரும் திணிக்கவில்லை, இந்தி படிக்கலாமே என்று யோசனைதான் கூறுகிறார்கள். எனவே போலியான, தவறான பிரசாரத்தை நிறுத்துங்கள். ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது என்பது சாதகமான விஷயம்தான், நிச்சயம் அது பாதகத்தை ஏற்படுத்தாது. நமது குழந்தைகள் சிறகடித்துப் பறக்க ஆசைப்படுகிறார்கள். அதை செய்ய விடுங்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், இந்தி திணிக்கப்படவில்லை, கற்றுக் கொள்ளலாமே என்று யோசனைதான் சொல்கிறார்கள். தமிழ் மொழி மீதும், தமிழ் கலாச்சாரம் மீதுமான தனது அன்பை பலமுறை நமது பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தியுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நான் தமிழ்நாட்டில் 36 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். என்னை பெருமைக்குரிய தமிழச்சியாக கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். தமிழ் மொழி மீதான என்னுடைய மரியாதை அளவில்லாதது. தமிழ்நாட்டின் மீதான எனது அன்பை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. சென்னைக்காக எனது இதயம் துடிக்கிறது. ஆனால் எந்த சிந்தனையும் இல்லாமல் சிலர் பொய்யான செய்திகளை நம்புவதுதான் எனக்கு வேதனை தருகிறது என்று கூறியிருந்தார் குஷ்பு.

ஆனால், தற்போது பாஜக வெளியிட்டுள்ள பட்டியிலில், அவரது மாநிலம் மகாராஷ்டிரா என தெரிவித்து உள்ளது.  குஷ்பு பாஜக உறுப்பினராக இணைவற்கு தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரா மாநில விலாசத்தையே  கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.  நக்கர்த் கான் என்ற இயற்பெயர் கொண்ட குஷ்பூ, 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர், அவரது தாய்மொழி மராத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே குஷ்பு, லாவண்யா தற்கொலை தொடர்பான விஷயத்தில் பேசும்போது,  “ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகள் உள்ள னர். பெண் குழந்தைகளை இழந்தவர்களுக்கு மட்டும்தான் அந்த வலி தெரியும். திமுகவினருக்கு அது தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் அரசியல் மட்டும்தான் செய்கிறார்கள்,” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்க்கது.