மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் கிறிஸ்கெயிலுகு ரூ.1.5கோடி இழப்பிடு வழங்குமாறு ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அப்போது மேற்கிந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெயிலும் இடம்பெற்றிருந்தார். கிறிஸ்கெயில் தங்கியிருந்த அறையில் மசாஜ் செய்யும் பெண் ஒருவர் சென்றதாகவும், அந்த பெண் முன்பு கெயில் ஆடையின்றி நின்றதாகவும் ஆஸ்திரேலியாவின் ஃபேர்ஃபாக்ஸ் என்ற செய்தித்தாள் நிறுவனம் 2016ம் ஆண்டு செய்தி வெளியிட்டது.
இதனை தொடர்ந்து பிற செய்தி நிறுவனங்களும் கெயில் குறித்து தவறான செய்தியை வெளியிட்டன. இதனால் மனவேதண்டை அடைந்த கெயில், “தன்னை பற்றி தவறான செய்திகள் வெளியிட்டப்பட்டதாகவும், தன் பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் செய்தி வெளியிட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இழப்பீடு வழங்கும் படியும் “ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை ஆஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றத்தில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது கெயில் மீதான வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை. செய்தி நிறுவனத்தால் அவரின் குற்றத்தை நிரூபணம் செய்ய முடியாததால் கெய்லுக்கு $220,770 டாலர் ( இந்திய ரூபாயில் 1.55 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.