கங்கை நதி தூய்மைக்காக உண்ணாவிரதம் இருந்த பேராசிரியர் மரணம்

ரித்வார்

கங்கை நதியை தூய்மைப் படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்த பேராசிரியர் மரணம் அடைந்தார்.

கான்பூரில் உள்ள தொழில் நுட்ப கல்வி மையத்தில் பேராசிரியராக ஜி டி அகர்வால் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் பேராசிரியராக பணி புரிந்த போது தேசிய கங்கை நதி நீர் ஆணையம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிலும் கௌரவ செயலராக இருந்து வந்தவர் ஆவார்.

அகர்வால் தனது பெயரி சுவாமி கியான் சுவ்ரூப் சனந்த் என மாற்றிக் கொண்டு ஆன்மிக பணிகள் செய்ய ஆரம்பித்தார். இவரது நீண்டா நாள் கோரிக்கை கங்கை நதியை தூய்மை படுத்த வேண்டும் என்பதாகும். தனது கோரிக்கைகளை வலியுறுத்தி அகர்வால் கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் ஹரித்வார் நகரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இவரது முக்கிய கோரிக்கைகள் ஹரித்வார் நகரில் இருந்து கங்கை நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதும் அந்த நதியில் அமைக்கப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் மர்றும் சுரங்கப் பணிகளை கைவிட வேண்டும் என்பதாகும். தண்ணீர் மற்றும் தேன் மட்டுமே அருந்தி இவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதால் இவரது எடை மளமளவென குறைந்தது.

அகர்வாலுக்கு உண்ணாவிரதம் காரணமாக உடல்ரீதியாக பல பிரச்னைகள் ஏற்பட்டன. அவரது போராட்டம் 110 நாளை எட்டியதால் உடல்நிலை கடுமையாக மோசம் அடைந்தது. அதை ஒட்டி அவர் மருத்துவ மனையில் அனுமதிக்க்ப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பலனின்றி அக்ர்வால் மரணம் அடைந்தார். அவர் மரணம் நாடெங்கும் உள்ள ஆர்வலர்கள் இடையில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இதன் மூலம் கங்கை நதியை தூமை படுத்த வேண்டும் என்னும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ganga activists G D Agarwal passed away after 110 days hunger strike
-=-