கஜா புயலால் பாதிப்பு: மின்கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் நீட்டிப்பு

திருவாரூர்:

ஜா புயலால் கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம்  செலுத்துவதற்கு ஏற்கனவே அவகாசம் கொடுத்துள்ள அரசு, தற்போது மேலும் அவகாசம் வழங்கி உள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,   திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர் கோட்டங்களில் டிச.26 வரை மின்கட்டணம் செலுத்த லாம். தஞ்சை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஒரத்தநாடு கோட்டங்களில் டிச.31வரை மின்கட்டணம் செலுத்தலாம்.

நாகையில் 14 பிரிவுகளில் உள்ள நுகர்வோர் டிச.26 வரை அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம். திருவாரூர் கோட்டங்களிலும், புதுக்கோட்டையின் அனைத்து கோட்டங்களிலும் டிச.26 வரை மின்கட்டணம் செலுத்தலாம்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நலன் கருதி 3வது முறையாக அவகாசத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நீட்டித்துள்ளது.

தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டும் அவகாசம் பொருந்தும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Gaja Storm affected districts: Extension of Time for Payment of Electricity Bills, கஜா புயலால் பாதிப்பு: மின்கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் நீட்டிப்பு
-=-