த்ரேசெட்

த்ரேசெட் நகரில் டிராமில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து மேலும் விவரங்கள் வெளியாகி உள்ளன.

நெதர்லாந்து நாட்டின் உத்ரேசெட் நகரில் உள்ள பரபரப்பான பகுதியான ஆக்டொபெர்பிளெயினில் ஒரு நெடுஞ்சாலை மேம்பாலம் உள்ளது. நேற்று இந்த மேம்பாலத்துக்கு கீழே டிராம் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அந்த டிராமில் பயணம் செய்த ஒரு நபர் திடீரென துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார்.

இந்த நிகழ்வு அந்நாட்டு நேரப்படி காலை 10.45 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 3.15 மணி) நடந்துள்ளது.

அந்த நபர் பல முறை துப்பாக்கியால் சுட்டதில் பயணிகளில் சிலர் காயமடைந்துள்ளனர்.  இந்த துப்பாக்கி சூட்டில் மூவர் மரணம் அடைந்துள்ளனர்.   துப்பாக்கியால் சுட்ட நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவ்ரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இதுவரை கைது ஏதும் நடைபெறவில்லை. உதவிப்பணியில் மூன்று ஹெலிகாப்டர்கள் ஈடு பட்டுள்ளன.

இந்த தாக்குதலுக்கு நெதர்லாந்து பிரதமர் மற்றும் தேசிய பயங்கரவாத தடுப்பு அமைப்பு தலைவர் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தோர் எண்ணிக்கை குறித்து காவல்துறை விவரங்கள் அளிக்காமல் உள்ளது. நகரம் தற்போது காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவ்ரமாக நடைபெற்று வருகின்றன.