தோஹா:
டி பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி 16வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

பிரான்ஸ்-டென்மார்க் அணிகள் இடையேயான ஆட்டம் ஸ்டேடியம் 974-ல் நடைபெற்றது.

பிரான்ஸ் அணி, தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை விளையாடியது. முதல் பாதி கோலின்றி முடிவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் தியோ ஹொர்னான்ட்ஸ் அனுப்பிய பால் முதல் மூலம் முதல் கோல் அடித்தார் மாபபே. 68-வது நிமிடத்தில் டென்மார் தரப்பில் கிறிஸ்டென்சன் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 1-1 என்ற நிலையில் சமநிலையில் இருந்தது.

86-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை நட்சத்திர வீரர் ஆன்டன் கிரைஸ்மேன் பாஸ் செய்த பாலை மாப்பே அடித்தார்.

இந்த வெற்றி மூலம் குரூப் டி பிரிவில் 6 புள்ளிகளுடன் பிரான்ஸ் நாக் அவுட் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.