ரூ. 740 கோடி மோசடி புகாரில் ரெலிகார் புரோமோட்டர்ஸ் முன்னாள் நிர்வாக இயக்குனர் சுனில் கோத்வானி கைது

Must read

புதுடெல்லி:

மோசடி புகாரின் அடிப்படையில் ரெலிகார் புரோமோட்டர்ஸ் முன்னாள் நிர்வாக இயக்குனர் சுனில் கோத்வானி உட்பட 3 பேரை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.


இது குறித்து போலீஸார் கூறும்போது, கோத்வானி மற்றும் இயக்குனர்கள் ரூ.740 கோடியை தவறான முறையில் பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர் என ரெலிகார் புரோமோட்டர்ஸ் நிறுவனம் கிரிமினல் புகார் கொடுத்திருந்தது.

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பினோம்.

இதற்கிடையே, விமான நிலையத்தில் வைத்து ரெலிகார் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சுனில் கோத்வானியை கைது செய்தோம்.
அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றோம் என்றனர்.

 

 

More articles

Latest article