வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த பாக்கிஸ்தான் கேப்டன்

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு பாக்கிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்ரிதி ஆறுதல் கூறியுள்ளார். எங்களின் சகோதர, சகோதரிகளான உங்களுடன் நாங்கள் எப்போதும் துணை நிற்போம் என தெரிவித்துள்ளார்.

Kerala_floods_Afridi

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வரலாறு காணாத அளவில் மழை பொழிந்துள்ளதால், 13 மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் லட்சக்கணகான மக்கள் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள், பிற மாநில அரசுகள், தன்னார்வலர்கள், பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என நிவாரணங்களையும், அத்யாவசிய பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளாத்தில் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிதி ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ கேரளாவின் வெள்ள பாதிப்பை கேள்விப்பட்டு மிகவும் வேதனை அடைந்தேன். உங்களின் வேதனைனையை அப்திரி அறக்கட்டளை சார்பாக பகிர்ந்து கொள்கிறேன். சகோதர, சகோதிரிகளான உங்களுடன் எப்போதும் நாங்கள் துணை நிற்போம். விரைவில் மீண்டு வர கடவுளை வேண்டிக் கொள்கிறேன் “ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-