முன்னாள் சபாநாயகர் உடல்நிலை கவலைக்கிடம்

கொல்கத்தா

க்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சோம்நாத் சட்டர்ஜி கடந்த 2004 முத 2009 வரை மக்களவை சபாநாயகராக பணி புரிந்தவர்.   இவருக்கு தற்போது 89 வயதாகிறது.  கடந்த 1968 ஆம் வருடம் இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.    அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இவருக்கு வயது மூப்பு காரணமாக பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டது.   அதை  ஒட்டி மருத்துவமனையில் அனுமதிக்காப்பட்ட இவர் இந்த மாதம் 1 ஆம் தேதி வீட்டுக்கு வந்தார்.   கடந்த 7 ஆம் தேதி இரவு இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள பெலெ வியூ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சோம்நாத் சட்டர்ஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.    பிரபல மருத்துவரான சுகுமார் முகர்ஜி தலைமையில் ஒரு குழு இவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.   இவருக்கு செயற்கை முறையில் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

சோம்நாத் சட்டர்ஜியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Former Lok sabha speaker Somnath chatterjee is in critical stage