ஈரோடு: முன்னாள் அதிமுக  அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை  திமுகவில் இணைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதிமுக,மநீம உள்பட பல கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்கள் திமுகவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதன்படி பல அதிமுக நிர்வாகிகள், மநீம நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியமாக உள்ளனர்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்கள் சுமார் 300 பேருடன்  சென்னை வந்து, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், நாளை காலை 10.30 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏமான தோப்பு வெங்கடாசலத்துக்கு நடைபெற்றுமுடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.  இதனால், அவர் அதிமுக வேட்பாளரை எதிர்த்து  சுயேச்சையாக களமிறங்கினார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கி இபிஎஸ், ஒபிஎஸ் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில், தோப்பு வெங்கடாசலம் திமுகவுக்கு தாவுகிறார்.