சென்னை: இந்திய வரலாற்றில் முதன்முறையாக பெட்ரோலை தொடர்ந்து டீசலும் லிட்டர் விலை ரூ.100ஐ தாண்டியது. ,இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

கச்சா எண்ணை விலை உயர்வு காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.அதை கட்டுப்படுத்துவதில் மத்திய மாநிலஅரசுகள் மெத்தனமாக செயல்படுகின்றன. இதனால், ஏழை மக்கள் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்படைந்து வருகின்றன.

கடந்த இரு மாதங்களாகவே பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தண்டி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது டீசல் விலையும் அதிகரித்து லிட்டர் ரூ.100 தாண்டி உள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 103.92 ரூபாய், டீசல் லிட்டர் 99.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்தும்,  டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து செஞ்சுரி அடித்துள்ளது.

இன்று  சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 104.92 ஆகவும்  டீசல் ரூ.100.33 ஆகவும் விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இந்த விலை உயர்வால் விலைவாசிகள் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.