இந்தியாவின் வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் – ஃபிச் நிறுவனம் மதிப்பீடு

டில்லி:

ந்தியாவின் நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிததின் மதிப்பீடு 7.8 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது, என ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 2019 ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 75 ருபையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஃபிச் ரேட்டிங்ஸ் மதிப்பீடு நிறுவனம், 2020 மற்றும் 2021 நிதி ஆண்டிற்கான வளர்ச்சி கணிப்பை முறையே 7.3 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகவும், 7.3 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாகவும் குறைத்துள்ளது.

முந்தைய காலாண்டில் 8.2 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ள இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிசமாக மிகவும் குறைந்து விட்டது. 8.6 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக வீழ்ச்சியடைந்தாலும், ஆரோக்கியமான வீதத்தில் வளர்ந்து வருவதாலும், ஃபிட்ச் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 5-ம் தேதி, ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) 2019 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.

தனியார் நுகர்வு மற்றும் நிகர ஏற்றுமதியிலிருந்த தொய்வு காரணமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது, என்று இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு டிசம்பர் 5-ம் திகதி அதன் மாத அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: இந்தியாவின் வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் - ஃபிச் நிறுவனம் மதிப்பீடு
-=-