மழை காரணமாக மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை

தென் மண்டல வானிலை ஆய்வு மையம் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.    மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.  தென் மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், “தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.  இதனால் தென் தமிழகப் பகுதிகளில் பலத்த காற்று வீசும்.   அதனால் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமர், மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் படுகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும்.   சென்னையில் இன்னும் 48 மணி நேரத்துக்கு மேக மூட்டம் இருக்கும்.   மழை பெய்ய ஓரளவு வாய்ப்புள்ளது.   அத்துடன் வேகமான தரைக்காற்று வீசக்கூடும்” என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Fisherman warned not to enter sea due to rain
-=-