ந்தியாவில் முதல் சூரிய  ஒளி அடிப்படையிலான கடல்நீர் சுத்திகரிப்பு மையத்தை ஏற்படுத்தி  ஐஐடி சென்னை சாதனை படைத்துள்ளது.

நம்மாநிலத்தில் ஏற்கனவே கடல்நீர் சுத்திகரிப்பு மையம் செயல்பட்டாலும்  கடல் நீரில் உள்ள தண்ணீரை சுத்திகரிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. அதில் குறிப்பாக கடல்நீரில் உள்ள  உப்பை அகற்றும் பணி மிகவும் சிக்கலானது, அதோடு இப்போதுள்ள சுத்திகரிப்பு முறைகளில் சுற்றுச் சூழலை மாசுப்படுத்தும் டாக்சிக் போன்ற நொதிகளும் உள்ளதால் இதற்கு மாற்றாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஏனெனில் நாட்டில் தண்ணீர் பிரச்னை மிக அதிகமாகும்போது கடல்நீர் சுத்திகரிப்புதான் மிகப் பெரிய நீர் ஆதாரமாக இருக்கும்.  இந்நிலையில் நாட்டில் முதல் சூரிய ஒளி அடிப்படையிலான கடலர்நீர் சுத்திகரிப்பு மையம் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினை மண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. இம்மையத்தில் நாள் ஒன்றுக்கு 10,0000 லிட்டர் கடல் நீரை  குடிநீராக மாற்றும்.

இந்திய புவியியல் அறிவியல் மையத்தின்  ரூ.1.22 கோடி நிதி உதவியுடன் இந்திய அறிவில் ஆய்வுக்கழகம், சென்னை மூலமாக  இந்த திட்டம்  விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது

பேராசிரியர் திரு.மணி,  (IIT-M இயந்திரவியல் துறையின் குளிர்பதன மற்றும் குளிர்சாதன ஆய்வு) அவர்கள் கன்னியாகுமரியில் அமைக்கப்பட உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு மையம் எப்படி செயல் படுகிறது என்பதை விளக்கினார்.

முதலில் கடல்நீரானது பெரிய கொள்கலனில் அனுப்பப்பட்டு அந்த கொள்கலனானது 37 செல்சி யஸ் முதல் 70 செல்சியஸ் வரை சூடாக்கப்பட்டுகிறது,  இதன் மூலம்  அதில் உள்ள கடல்நீரும் சூடாக்கப்படுகிறது. சூடாக்கப்பட்ட கடலர் நீரானது வெற்றிடத்தில் வழியே அனுப்பப்படும்போது நீராவியாக மாற்றுகிறது. இவ்வாறு அனுப்பப்படுவதில் கிடைக்கும் நீராவியை மீன்தேக்கி வழியே செலுத்தப்பட்டு கடல்நீரானது குடிநீராக மாற்றப்படுகிறது

இந்த சுத்திகரிப்பு மையத்தில் கடல்நீரை கொதிக்கவைக்க  சூரிய  ஒளி பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்பாட்டிற்கு ஒரு நாளைக்கு 15 கேவி அளவுள்ள மின்சாரம் தேவைப்படும், எனவே இவற்றைப்பூர்த்தி செய்ய  சூரிய   ஒளி  மூலம் மின்சாரம் பெற சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இவை சூரிய  ஒளி  இருக்கும்போது மட்டுமே செயல்படும், அதாவது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும்.

இந்த சுத்திகரிப்பு மையத்தில் மூலம் சுத்திகரிக்கப்படும்  நீரில் 2ppm (parts per million) அளவு மட்டுமே  உப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் உலக சுகாதார மையம் நாம் குடிக்கும் நீரில் 500 ppm (parts per million) அளவு உப்பு இருக்கலாம் என்று பரிந்துரைக்கிறது, நாம் சுத்திகரிக்கும் குடிநீரில் 2ppm அளவே உள்ளதால் உள்ளூர் நகராட்சி வழங்கும் தண்ணீரோடு கலந்து மக்களுக்கு வழங்கலாம் என்றும் தெரிவித்தார்.

கடந்த 18 மாதங்களாக 4 பேராசிரியர்கள்,, 9 முனைவர் பட்ட ஆய்வ மாணவர்களுக்கும் இணைந்து இந்த சுத்திகரிப்பு மையத்தில் தகவல்களை ஆராய்ந்துவந்தனர், மேலும் இந்த சுத்திகரிப்பு ஆய்வு மையத்தினை ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர்  மற்றும் 10 கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும்  அளவுக்கு விரிவாக்க உள்ளதாகவும் தெரிவித்தார்

சரியான சமயத்தில் மழை கிடைக்காததால் கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுவருகிறது. எனவே இதுபோன்ற ஆய்வுகள் மட்டுமே இப்போதும், எப்போதும் ஏற்படும் தண்ணீர் பிரச்னைகளை தீர்க்க உதவும்.

-செல்வ முரளி