டோக்கியோ:

3 மீட்டர் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உள்ள கைரேகைகளை பதிவு செய்யும் தொழில்நுட்பத்தை ஜப்பானில் உள்ள தேசிய தகவல் மைய ஆராய்ச்சியாளர் அறிமுகம் செய்துள்ளார்.

பாதுகாப்பு மற்றும் தகவல்களை அறிய பயோமெட்ரிக் முறையிலான கைரேகை பதிவு என்பது தற்போதைய காலகட்டத்தில் அவசியமான் ஒன்றாகிவிட்டது. இது குறித்து அந்த மைய ஆராய்ச்சியாளர் சங்கய் சிம்புன் கூறுகையில், இந்த நவீன செல்போன் கேமிரா அதிக சக்தி வாய்ந்தது. 3 மீட்டர் தொலைவில் உள்ள நபர் தனது கை விரல்களை காண்பித்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அல்லது எடுக்கும் புகைப்படங்களில் அவர்களது கைரேகையை பதிவு செய்துவிடும்.

 

ஆன்லைனில் வெளியிடப்படும் புகைப்படங்களை கொண்டு தகவல்களை சேகரிக்கும் செயலிக்கு தனது தளத்தில் டுவிட்டர் தடை செய்துள்ளது. இப்படி புகைப்படங்களை எடுத்து தலையை மாற்றி ஆபாச படங்களாக சமூக விரோதிகள் உலாவ விடுவதை தடுக்கும் வகையில் இந்த செயலிக்கு ரஷ்யாவும் தடை விதித்துள்ளது.

இந்த சமயத்தில் ஜப்பான் ஆராய்ச்சியாளரின் இந்த அறிவிப்பு ஜப்பான் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு செல்பி எடுக்கும் பலர் வெற்றி சின்னமாக இரு விரல்களை காட்டியவாறு தான் படம் எடுத்துள்ளனர். இந்த குழந்தை தனமான செயலினால் பல மில்லியன் ஜப்பானியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. இந்த புதிய கேமிரா மூலம் ஆன்லைனில் உள்ள புகைப்படங்களில் இருந்து கைரேகைகளை எளிதில் கைப்பற்ற முடியும்.