உலகக் கோப்பை கால்பந்து 2018 :  இன்று  ரஷ்யா – சௌதி அரேபியா போட்டி

மாஸ்கோ

ந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு மாஸ்கோவில் 21 ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடங்க உள்ளது.

முதல் போட்டியாக இந்த போட்டியை நடத்தும் ரஷ்யாவுடன் சௌதி அரேபியா மாஸ்கோ லூஸ்னிகி விளையாட்டரங்கில் மோதுகிறது.

உலகத் தரவரிசைகளில் மிகவும் கீழ் நிலையில் உள்ள இந்த இரு அணிகள் முதல் முறையாக  மோத உள்ளன.

தரவரிசைப் பட்டியலில் ரஷ்யா 70ஆம் இடத்திலும் சௌதி அரேபியா 67ஆம் இடத்திலும் உள்ளன.

தர வரிசைப் போட்டியில் மிகவும் கிழ் நிலையில் உள்ள போதிலும் இந்த போட்டிகளை நடத்துவதால் ரஷ்யாவுக்கு போட்டிகளில் கலந்துக் கொள்ளும் தகுதி கிடைத்துள்ளது.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: FIFA 2018 : Today first match : Russia vs Saudi Arabia
-=-