டில்லி,

சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகள் தற்கொலைகள் குறித்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொதுநல வழக்குக்கான மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள், தமிழக அரசு விவசாயிகள் பிரச்சினையில் அக்கறை காட்டவில்லை என்றும், விவசாயிகள் பிரச்னையில் தமிழக அரசு மெத்தன போக்கை கடைப்பிடிக்கக் கூடாது; மாநில அரசு அமைதி காப்பது சரியான அணுகுமுறை அல்ல, விவசாயிகளின் தற்கொலையை தடுக்க தவறியது ஏன் , விவசாயிகளின் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என்று  கடுமையாக சாடினார்.

விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.  தொடர்ந்த வழக்கு விசாரணை வருகிற 28–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் தமிழக விவசாயிகள் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் இன்று பிரமாண பத்திர்ம்  தாக்கல் செய்யப்பட்டது. அதில், வறட்சி காரணமாக தமிழகத்தில் எந்தவொரு விவசாயியும்  தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தது..

மேலும் கடந்த ஆண்டு 82 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளார்கள். உடல்நலக்குறைவு, வயது முதிர்வு, மாரடைப்பு, போன்ற காரணங்களால் மரணம் அடைந்துள்ளார்கள்.

அதில்  30 பேர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துள்ளார்கள். மரணம் அடைந்த 82 விவசாயிகள் குடும்பத்துக்கும் மனிதாபிமான உணர்வோடு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய விவசாய காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ரூ.623 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தாக்கல் செய்த பிரமான பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து  இவ்வழக்கை வழக்கு சுப்ரீம் கோர்ட்டு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உள்ளது.