Farm loan waiver important than doing away with red beacon: Supriya Sule

 

சிவப்பு சுழல் விளக்குகளை விஐபிக்களின் வாகனங்களில் இருந்து அகற்றுவதை விட, விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது அத்தியாவசியமானது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்பியும், சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

 

மகாராஷ்ட்ர மாநிலம் நாசிக்கில் கட்சியின் அண்மைய தேர்தல் தோல்விகள் குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுப்ரியா இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.

 

மேலும், மகாராஷ்ட்ர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை கடுமையாக அவர் சாடினார். எதற்கெடுத்தாலும் பிரதமர் மோடியை தேவேந்திர பட்னாவிஸ் அப்படியே காப்பியடிப்பதாக அவர் அப்போது கூறினார். பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியைப் போலவே, நான் முதலமைச்சர் பேசுகிறேன் என்ற உரை நிகழ்ச்சியை தேவேந்திர பட்னாவிஸ் நடத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். சிவப்பு சுழல் விளக்குகளை அகற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதில் காட்ட வேண்டும் எனவும் சுப்ரியா அப்போது வலியுறுத்தினார்.