பிரபல எழுத்தாளர் குல்தீப் நய்யார் மரணம்

டில்லி

பிரபல எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான குல்தீப் நய்யார் காலமானார்.

பிரபல எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான குல்தீப் நய்யார் கடந்த 1923 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி பிறந்தவர்.   இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை சியால் கோட்டிலும், இதழியல் கல்வியை அமெரிக்காவிலும் பயின்றவர்.   உருது பத்திரிகையாளராக தனது பத்திரிகைப்பணியை தொடங்கினார்.

குல்தீப் நய்யார் 11 புத்தகங்களை எழுதி உள்ளார்.  அனைத்துக் புத்தகங்களுமே புகழ் பெற்றவைகள் ஆகும்.   இவர் மாநிலங்களை உறுப்பினர் பதவியில் இருந்துள்ளர்.   ஐ நா சபையில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துள்ளார்.  இவர் இடது சாரி சிந்தனை கொண்ட அரசியல் விமர்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் நிலை சரியில்லாததால் குல்தீப் நய்யார் டில்லியில் காலமானார்.   தற்போது அவருக்கு 95 வயதாகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Famous writer Kuldeep nayar passed away
-=-