முகநூல் அதிர்ச்சி: சென்னையில் குழந்தைகளுக்கு அலகு   குத்தி கொடுமை!

குழந்தைகள் கதறி அழ, அவர்களுக்கு நேர்த்திக்கடன் என்ற பெயரில் வேல் (அலகு) குத்திய கொடுமை சென்னையில் அரங்கேறியுள்ளது.

ரமேஷ் சி.ஆர். என்ற முகநூல் பதிவர் நேற்று இது குறித்த படங்களை பதிவேற்றியிருக்கிறார்.

அப்படங்களில், சுமார் எட்டு மற்றும் நான்கு வயது குழந்தைகளின் கன்னங்களிலும் வேல் குத்தப்பட்டு எலுமிச்சம்பழம் தொங்கவிடப்பட்டுள்ளது.

பார்ப்பவர்களை பதறவைக்கும் இந்த படங்களை பதிவிட்ட ரமேஷ் சி.ஆர். என்ற பதிவர், , “இன்று சென்னை புலியாந்தோப்பு பகுதியில் உள்ள ஶ்ரீ முன்டகன்னியம்மன் கோவிலில் எங்கள் செல்வங்கள் பழம் குத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பின்னூட்டமிட்டுள்ள பதிவர்கள் பலர், இச்செயலைக் கண்டித்திருக்கிறார்கள்.

நேற்று (05.08.2018) மாலை சுமார் நான்கு மணிக்கு பதிவிடப்பட்டுள்ள இந்த பதிவுக்கு இன்று (06.08.2018)  காலை 7.30 வரை, 66 பேர் லைக் குறியிட்டுள்ளார்கள். 73 பேர் ஆத்திரக்குறியீட்டையும் 12 பேர் சோக்க் குறியீட்டையும், இருவர் காதல் குறியீட்டையும் பதிந்துள்ளனர்.

அதே போல பலரும் குறிப்பிட்ட பதிவரை கண்டித்துள்ளனர்.

Gokul Anand: தயவு செய்து இப்படி செய்ய வேண்டாம்….வருத்தமாக இருக்கிறது…குழந்தையம் கடவுளும் ஒன்று

Thamarai Selvan மூளை கெட்ட முட்டாள்தனம் பாவம் டா அந்த குழந்தைக்குகளுக்கு வலி எப்படி இருக்கும், எங்க போனீங்க human rights Commission இதுதான் இந்தியாவின் வளர்ச்சியா ? கடவுள் உண்மை என்றால் நீங்கள் எல்லாம் நல்லா அனுபவிப்பீர்கள் !!

Thamarai Selvan நகரத்து காட்டு வாசிகள் !!

Sheik Abdullah இந்த வன்கொடுமைக்கு போஸ்க்கோ ல போட்டா கூட குத்தம் இல்ல…

Bright Singh Johnrose இப்படி பட்ட முட்டாள்களை மக்கள் மத்தியில் நிறுத்தி கேட்க வேண்டிய விதத்தில் கேட்டால் தான் இதை பார்த்து நான்கு பேர் நாளை தங்கள் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்ய முயற்சிக்க மாட்டார்கள்

Brinda உங்களுக்கு எல்லாம் அறிவு இல்லையா. பெத்த குழந்தையை இப்படியா கொடுமைப்படுத்துவது. மனசாட்சி இல்லை. Child abuseல உங்களையும் உங்க மனைவியை தூக்கி உள்ள வெச்சா தான் அறிவு வரும்.

செல்வம் கே குத்தவேண்டுமானால் நீயும், உனது மனைவியும் உடம்பு பூர குத்திக்கிட்டு நகர்வலம் போகவேண்டியது தானே. நாகரிக காலத்தில் காட்டுமிராண்டிகள் போல செயல் செய்துவிட்டு கொஞ்சம் கூட கவலைப்படாமல் புகைப்படம் எடுத்து போடுகின்றீர்கள் என்றால் புரிந்து தான் செகின்றீர்களா இல்லை. புரியாமல் இருக்கின்றீர்களா?..

இனியன் துரைசாமி இரக்கமற்ற தந்தையை பெற்ற கொடுரமான செயல் கண்டிக்கத்தக்கது.

 

–    இவ்வாறு பலரும் கண்டனம் தெரிவித்து பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.

அதே நேரம், இச்செயலை ஆதரித்து பதிவிட்டவர்களும் இருக்கிறார்கள்.

Kamal Kamal என்பவர் வணங்கும் குறியீட்டை பதிந்து ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் “காட் ப்ளஸ் யூ” என்று பதிவிட்டுள்ளார்.

 

மேற்கண்ட பதிவு பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இயற்கை முறையில் வீட்டில் பிரசவம் பார்த்தால் தானாக முன்வந்து கைது செய்யும் அரசு, இது போன்று குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவதைத் தடுக்க தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Facebook:  shockChildren were tortured by piercing vel, சென்னை: குழந்தைகளுக்கு அலகு   குத்தி கொடுமை!, முகநூல் அதிர்ச்சி: சென்னையில் குழந்தைகளுக்கு அலகு   குத்தி கொடுமை!
-=-