நியூயார்க்: பேஸ்புக் நிறுவனம், தனது நிறுவனத்தில்  பணியாற்றி வரும் 7 ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நவம்பர் மாதம் 11 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்த ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தற்போது அடுத்த ரவுண்ட் லே ஆஃப் செய்ய தயாராகிவிட்டது.

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனம் மெட்டா. இது, சமூக வலைதளங்களான, வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மாதிரியான தளங்களை நிர்வகித்த வருகிறது.  இதன் தலைவராக மார்க் ஜூக்கர்பெர்க் (mark zuckerberg) இருந்து வருகிறார்.

உலக நாடுகளிலும் பொருளாதார சிக்கல்களைத்தொடர்ந்து, பல்வேறு தொழிற்நிறுவனங்களும் வேலையிழப்பை மேற்கொண்டு வருகின்றன. நிதிச்சிக்கல் என காரணம் கூறி, லட்சக்கணக்கான பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.

ஏற்கனவே பிரபல ஐடி நிறுவனங்களான,  கூகுள், அமேசான், டிவிட்டர்   உள்பட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களில் பல ஆயிரம்பேரை பணி நிக்கம் செய்த நிலையில், உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான மெட்டா, கடந்த (2022) நவம்பரில் 13 சதவீதம் ஊழியர்களை குறைத்துள்ளதுஅதாவது முதல்கட்டமாக  13ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்திருந்தது.

அப்போது, மேலும் 7000 பேரை 2023 மார்ச் மாதம்,  2வது சுற்றில் பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவுறுத்தி இருந்தது.  அதன்படி,  தற்போதைய ஊழியர்களில் 10 சதவீதம் அல்லது ஏறக்குறைய 7000 பேரை பதவி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது,  குறைவான செயல்திறன் கொண்டவர்கள்  மார்ச் மாதத்திற்குள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளது.