எக்ஸ்ளூசிவ் படங்கள்: எம்.ஐ.டி. கல்லூரியில் அஜீத்

சென்னை

விஸ்வாசம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் மீண்டும் தக் ஷா குழுவுடன் இணைந்துள்ளார் நடிகர் அஜித்குமார்

தான் ஒரு நடிகர் என்றாலும் கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல் என அனைத்து துறைகளிலும் கலக்கி வருபவர் நடிகர் அஜித்குமார். பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏரோ மாடலிங் செய்து வந்த அஜித் எம்.ஐ.டி-ல் உள்ள தக் ஷா என்ற மாணவர்கள் அணியுடன் இணைந்து பணியாற்றினார் அதன்படி அதிக நேரம் வானில் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்திற்கான போட்டியில் கல்லூரி அளவில் அஜித்தின் தக்க்ஷா அணி முதல் இடத்தைப் பிடித்தது.

பின்னர் ஆஸ்திரேலியாவில் நடந்த யு.ஏ.இ. மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலன்ஞ் போட்டிக்கு தகுதிபெற்றது. தக்ஷா குழு இரண்டாம் இடத்தை பிடித்தது. அஜித்தின் அணி உலக அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படத்திலும் அஜித் நடித்து வந்தார்.

மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் காட்சிகளை, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் வைத்து படமாக்கப்பட்டது. இதனையடுத்து படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் முழுவதையும் முடித்து கொடுத்தார்

இந்நிலையில் படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்த அஜித், தனது பழைய கெட்அப்புக்கு மாறி சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய கையோடு எம்ஐடி கல்லூரியில் மீண்டும் தக் ஷா குழு ;வுடன் இணைந்துள்ளார் நடிகர் அஜித்குமார்.

இன்று அவர் எம்ஐடி கல்லூரியில் அஜித் ஆளில்லா குட்டி விமானத்தை பறக்கவிடும் வீடியோவையும், புகைப்படங்களையும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வேலை என்பது வேறு, பேஷன் என்பது வேறு. இரண்டுக்கும் சரியாக இடம் கொடுத்து வருகிறார் நடிகர் அஜித்குமார் என்று அவரது ரசிகர்கள் அஜித்தின் புகைப்படங்களை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Exclusive pictures of Ajit at MIT
-=-