26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை திறப்பு: கேரள மக்கள் பீதி

இடுக்கி:

சியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான கேரள மாநிலத்தின் இடுக்கி அணை தனது முழுக் கொள்ளளவை எட்டி  இருப்பதால், 26 ஆண்டுகளுக்கு பிறகு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே 1992ம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட உள்ள  நிலையில், தற்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணையின் கரையோரம் மற்றும் தண்ணீர் செல்லும் கால்வாய்கள் அருகில் குடியிருந்து வரும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

அணையில் இருந்து வெளியாகும் தண்ணீர்,  இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம் பகுதிகளில் பாய்ந்தோடும், இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. இதில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்ட இருக்கிறது. அதேபோல் இதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழ்நாட்டு பகுதியிலும் அதிக தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் தொடர் மழை காரணமாக, அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அணை முழு கொள்ளவை எட்டி உள்ளது.

சியாவின் பெரிய அணைகளில் ஒன்றானதும்,  ஆர்க் வடிவிலானதுமான அணை இடுக்கி அணை, தற்போது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணை திறக்கப்பட்டுள்ளது. . இடுக்கி மாவட்டத்தில் உள்ள  குறவன் குறத்தி என்ற இரண்டு ராட்சச மலைகளுக்கு இடையில் இந்த அணை கட்டப்பட்டது. இதுதான் ஆசியாவில் இருக்கும் மிகப் பெரிய ஆர்க் அணைகளில் ஒன்றாகும்.

கேரளாவின் தண்ணீர் தேவைக்காகவும், மின்சார தேவைக்காகவும் 1960ம் ஆண்டு இந்த அணை  கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டுபயன்பாட்டுக்கு  வந்தது. இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், இடுக்கி யில் உள்ள மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப்பயன்படுகிறது. இந்த நீர்மின் நிலையத்தில் இருந்து 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. செருதோனி, குலமாவு ஆகிய இரு அணைகளையும் இணைத்து, இடுக்கி அணை கட்டப்பட்டு உள்ளது. 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளவு 72 டிஎம்சி ஆகும்.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் பெய்துவரும் தீவிரமான தென் மேற்கு பருவமழையால், அணை நிரம்பி வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 2 ஆயிரத்து 403 அடியில் இப்போது, 2,395 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பதால்,  அணையில் உள்ள செருதோனி அணை மதகுகள் வழியாக திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன் கடந்த 1992-ம் ஆண்டு இடுக்கி  அணை தண்ணீர் செருதோனி அணை வழியாகத் திறக்கப்பட்டது. அதன்பின் கடந்த 26 ஆண்டுகளாக இடுக்கி அணை நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில், இப்போது அணை தனது முழுக்கொள்ளவை எட்ட இருப்பதால், அணை விரைவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இடுக்கி அணையைத் திறப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்  நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  முதல்வர் பினராயி விஜயன், வருவாய்துறை அமைச்சர் சந்திரசேகரன், நீர்வளத்துறை அமைச்சர் மாத்யு டி தாமஸ், வருவாய் கூடுதல் செயலாளர் பி.எச். குரியன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்கள். தண்ணீர் பாய்ந்தோடும் பகுதியில் வசிக்கும்  மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவது குறித்தும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய இடுக்கி மாவட்ட நிர்வாகம்மூலம் விரைவாகச் செய்ய விவாதிக்கப்பட்டது.

இந்த அணை இதற்கு முன் 1981-ம் ஆண்டும், 1992-ம் ஆண்டும் ஆகிய  இருமுறை மட்டுமே இடுக்கி அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியதால், திறக்கப்பட்டுள்ளது அதன்பின் 26 ஆண்டுக ளுக்கு பிறகு தற்போதுதான்  திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை திறப்பு: கேரள மக்கள் பீதி, Exceeding reservoir water level creates panic among Kerala residents as Idukki dam opens after 26 years
-=-