மிழக காங்கிரஸ் கமிட்டி” தலைவர் திருநாவுக்கரசரை, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவிதி” என்று முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று மாலை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. அக்கூட்டத்தில் எடப்பாடி அரசு குறித்து நாளை நடக்க இருக்கும் வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்க முடிவு செய்ததாக செய்தி வெளியானது. திருநாவுக்கரசர் பெயரிலான டிவிட்டர் பக்கத்திலும் இதே தகவல் வெளியானது.

ஆனால் சிறிது நேரத்திலேயே மறுத்த திருநாவுக்கரசர், “காங்கிரஸ் முடிவு குறித்து நாளைதான் தீர்மானிப்போம்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன், “திருநாவுக்கரசரின் செயல்பாடு மேலிட முடிவுக்கு எதிரானது. திமுகவின் நிலைப்பாட்டை ஒட்டித்தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் முடிவு இருக்கும் என்று டில்லி மேலிடம் தெரிவித்தது. அதாவது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகத்தான் காங்கிரஸ் ஓட்டுப் போடும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதுகுறித்த முடிவை காங்கிரஸ் மேலிடம் எப்போதோ எடுத்து விட்டது” என்றார்.

மேலும் அவர்,”மேலிட முடிவுக்கு எதிராக திருநாவுக்கரசர் செயல்படுகிறார். இதுகுறித்து கட்சி மேலிடத்தில் புகார் அளிக்கப்படும். விரைவில் திருநாவுக்கரசர் அதிமுகவுக்குப் போய் விடுவார். அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவிதி என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை” என்று காட்டமாக தெரிவித்தார் இளங்கோவன்.