evening-news
அதிநவீன மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் வகையில் செங்கல்பட்டில் மருத்துவ பூங்காவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது இந்தியாவில் அமையும் முதல் மருத்துவ பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. 
திருவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மற்றும் குளங்கள் உள்ளன. உலககின் பல்வேறு பகுதிகளிலிருந்து அழையா விருந்தாளியாக வெளிநாட்டுப் பறவைகளும், காட்டுவாத்து மற்றும் பல விதமான பறவைகளும் வந்துள்ளன.
காளையார்கோவில் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் காவிரி குடிநீர் வராததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
திருப்புத்தூர் பகுதி வழியாக செல்லும் தேசிய நெஞ்சாலையில் அதிகமான வளைவுகள் இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது.
காவேரிப்பட்டணம் அருகே போதிய கட்டட வசதி இல்லாததால் சமுதாய கூடம் மற்றும் பள்ளி வராண்டாவில் மாணவர்கள் படித்து வருகின்றனர். 
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாக சாலை குண்டும், குழியுமாக மாறி வரும் நிலையில் இதனை தார் வைத்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சென்னையில் ஆளுநர் மளிகை அருகே போராட்டம் நடத்தி வந்தனர். 
தங்கச்சிமடம் அய்யன்தோப்பு பகுதியில் 20 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால், காட்டிற்குள் வாழ்வது போல் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். புறக்கணிக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் ராஜகோபுர பணிகள் 7 நிலைகள் நிறைவடைந்துள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
சிவகாசி அருகே சித்தநாயக்கன் பட்டியில் மத்தாப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 
கும்பகோணத்தில் இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
காஷ்மீர் குறித்து கனவு காண்பதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கற்களைக் கொண்டு தாக்கியும், படகுகளை மூழ்கடித்தும், வலைகளை அறுத்தும் இலங்கை கடற்படை அட்டூழியம் செய்துள்ளது.
ஆலங்குளத்தில் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் மான்கள், மயில்களால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர் என சீமான் தெரிவித்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனை சென்ற சீமான் அங்கு சுகாதாரத்துறை அமைச்சர் சந்தித்து பேசியதாக தெரிவித்தார். வதந்திகளை நம்ப வேண்டாம் அவர்கள் கேட்டு கொண்டதாக சீமான் கூறினார். 
அடுத்த மாதத்திற்குள் 2 ராக்கெட் உதவியுடன் 80 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் என மகேந்திரகிரி இயக்குனரின் ராகேஷ் தெரிவித்துள்ளார். 79 வெளிநாட்டு செயற்கைகோள், ஒரு இஸ்ரோ செயற்கைகோள் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்றும் சூரியனை பற்றி ஆய்வு நடத்த ஆதித்யா செயற்கைகோள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். 
புதுச்சேரியில்  அமைதியை குலைக்கும் வகையிலும், மக்களுக்கு அச்சம் விளைவிப்பவர்களையும் ஒடுக்க குண்டர் சட்டத்தை பயன்படுத்துங்கள் என காவல்துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தி உள்ளார்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2,842-க்கும், ஒரு சவரன் ரூ.22,736-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.45.50-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,495-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.60 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை தேவை அதிகரித்து வருவதால் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 
மதன் மாயமான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பச்சமுத்துவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  மனு மீது 4 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என பச்சமுத்து, ரவி பச்சமுத்துவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கை அனைத்து கோணங்களிலும் விசாரிக்க விசாரணையை 24ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயமடைந்தனர்.
பிரதமர் மோடியை காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா டெல்லியில் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைந்து வருவதுடன் விரைவில் இல்லம் திரும்ப தயாராகி வருகிறார். அவரது உடல் நிலை வீட்டின் அமைப்பு போன்றவற்றை கணக்கிட்டு வாஸ்து முறைப்படி சில மாற்றங்கள் செய்யப்பட்டு போயஸ் இல்லம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மின்னனு வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டும், 2011 ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனுவை அக்டோபர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாகையில் பாரதிதாசன் காலை மாற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வலியுறுத்தி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்கள் நல கூட்டணி சார்பில் திருச்சியில் காவேரி மேளான்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலையில் பொது மக்கள் மத்தியில் நேர்மையாக செயல்படுவதாக கூறப்படும், கோட்டாட்சியர் “உமா மகேஸ்வரி” (RDO) -வின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன் என்பவர் ஒரு பட்டாசு கடைக்கு தலா ரூ.5000/- ரூபாய் லஞ்சமாக பணம் வசூலிப்பதால் பொது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது…
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எனது அத்தையை பார்க்க அனுமதிக்கவில்லை ! நுழைவு வாயிலில் காத்திருந்து திரும்பி விட்டேன்! ஜெ.,வின் சொந்த அண்ணன் ஜெயக்குமார் அவர்களின் மகள் தீபா குற்றச்சாட்டு.
நெல்லை குருவிக்குளத்தை சேர்ந்த அன்புஸ்டெல்லா காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
முதலமைச்சரை சந்திக்கவில்லை ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக நம்பிக்கைக்குறியவர்கள் கூறினார்கள் என சென்னைஅப்போலோ மருத்துவமனைக்கு சென்று திரும்பிய தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
சென்னை பெரியமேட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த 3 பேருக்கு ஐ.எஸ். தீவிராவதிகளுடன் தொடர்பு என தகவல் – 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை
கோவையில் தொழிலதிபர் பஷீர் வீட்டில் கொள்ளையடித்தவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. 
விழுப்புரம் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உட்பட 6பேர் செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 7.11.16 அன்று நீதிபதி ஒத்திவைத்தார். இந்த வழக்கில் பொன்முடியின் மகன் ஆஜராக வில்லை
லோதா கமிட்டி குற்றச்சாட்டில் உண்மையில்லை என பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை என கூறுவது தவறு என்று பிசிசிஐ தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் தமிழகத்துக்கு துரோகம் விளைவிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
GSAT-18 செயற்கைகோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. விஞ்ஞானிகளுக்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு
அனந்தபுரி விரைவு ரயிலில் வடமாநில பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததால் அனந்தபுரி விரைவு ரயில் அரை மணி நேரம் தாமதமாக சென்னை புறப்பட்டது. 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரில் பள்ளி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் 2,1/2, வயது ஆண் குழந்தை மைத்திரேயன் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தது.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்வீசி தாக்குதல் நடத்தி, 50க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகளில் உள்ள வலைகளை அறுத்தெரிந்தும் அட்டூழியம்.
டிராபிக் ராமசாமி தொடர்ந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.