ஈரோடு:

ரோட்டில் குழந்தை இல்லாத தம்பதியிடம் ரூ.நான்கரை லட்சம் பணம் வாங்கிக்கொண்டு குழந்தையை கொடுத்துவிட்டு பின்னர் திருப்பி வாங்கி ஏமாற்றியது தொடர்பாக தரகர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக மதுரை தம்பதி மற்றும் புரோக்கர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த  தியாகராஜன் மகேஷ்வரி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக குழந்தையில்லை. மேலும், ஐவிஎப் முறையிலும் குழந்தை உருவாகி 8 வது மாதத்தில் இறந்துவிட்டது.  இதன் காரணமாக மனம் நொடிந்த தம்பதியினர் குழந்தையை தத்தெடுத்து வழக்க முடிவு செய்தனர்.

இதுதொடர்பாக தனது உறவினர் ஈரோடு  ஈரோடு மாவட்டம் கைகாட்டிவலசு  குதியை சேர்ந்தவர் சுந்தரிடம் தெரிவித்துள்ளனர். அவர் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கூறி, தரகர் மூலம் குழந்தை தத்தெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து தரகர் மற்றும் மேலும் ஒரு தரகர் தம்பதிகள், அவர்களிடம்  சேலம் பகுதியை சேர்ந்த பெண் குழந்தை ஒன்று இருப்பதாகவும், அதற்கு ரூ.நாலறை லட்சம் செலவாகும் என்று கூறிய தரகர், அதை உடனே தர வேண்டும் என்று வாங்கி உள்ளார்.

இதற்க மதுரை  தம்பதியினர் சம்மதம் தெரிவிக்க புரோக்கர்களிடம் பணம் கொடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெண் குழந்தையை வாங்கி உள்ளனர்.

ஆனால், ஒருசில நாட்களில் புரோக்கர்கள் திரும்பி வந்து, குழந்தையின் தாய் பிரச்சினை செய்வ தாக கூறி மதுரை தம்பதியிடம் இருந்து குழந்தையை திருப்பி வாங்கி சென்றனர். பின்னர் அவர்களுக்கு குழந்தையும், கொடுக்கப்படவில்லை. அதற்கான பணமும் திரும்பி கொடுக்கவில்லை.

இதனால் பிரச்சினை ஏற்படவே, மதுரை தம்பதியினரின் உறவினர்  சுந்தர் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் கடந்த 6-ந்தேதி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் மதுரை தம்பதியை ஈரோட்டிற்கு வரவழைத்து   தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் குழந்தையை வாங்கி, விற்பனை செய்த புரோக்கர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தைத்தொடர்ந்து ஈரோடு போலீசார் சம்பவ நடந்த இடம் சேலம் மாவட்டம் என்பதால் அங்கு சென்று புகார் கொடுங்கள் என்று கூறி மதுரை தம்பதியை அனுப்பி வைத்தனர். தற்போது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரை தம்பதிகளிடம் குழந்தையை விற்பனை செய்து ஏமாற்றியது நாமக்கல் பகுதியை சேர்ந்த செவிலியர் தம்பதியா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.