ஆந்திர மாநிலத்தில் பள்ளிக்குள் புகுந்து இரண்டு 10-ம் வகுப்பு மாணவிகளை மின்சார ரம்பத்தால் தாக்கிய ஹேமந்த் என்ற இளைஞரின் வலது கால் மருத்துவர்களால் அகற்றப்பட்டது.
போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் 6 முறை சுடப்பட்டதில் அவரது காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு அழுகல் ஏற்பட்டதால், நீதிமன்ற அனுமதியுடன் அனந்தபூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் கால் அகற்றப்பட்டது.

காதலை ஏற்க மறுத்ததால் 15 வயது மாணவியை அவரது உறவினரான ஹேமந்த் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
படுகாயமடைந்த மாணவி பெங்களூருவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பெற்றோரை இழந்த ஹேமந்த், உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தவர் என்றும், போதைப் பழக்கம் மற்றும் தவறான நடத்தையால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து இதுவரை அவரது குடும்பத்தினர் யாரும் அவரைப் பார்க்க வரவில்லை என்றும் தெரிகிறது.