சான் பிரான்சிஸ்கோ:
டிவிட்டர் சமூக வலைத்தளத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கியுள்ளார்.

இதை உறுதி படுத்தும் விதமாக, எலான் மஸ்க், தற்போது டிவிட்டர் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

போலி கணக்குகள் பற்றிய தகவல்களை நிறுவனம் வழங்கத் தவறியதால், ட்விட்டரை வாங்குவதற்கான தனது 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக மஸ்க் இன்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ட்விட்டரின் பங்குகள் 7% சரிந்தன.