டில்லி

ரும் 10 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் போட உள்ள நிலையில் அதற்கான தகுதிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

நாட்டில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் வரும் 10 ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு 60 வயதை தாண்டியோருக்கு  போடப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார்.   தவிர இணைநோய் உள்ளவர்களுக்கும் மருத்துவர்களின் சிபாரிசு அடிப்படையில் பூஸ்டர் டோஸ் போடப்படும் என அறிவித்தார்.

இதற்கான தகுதிகள் குறித்து இங்கு காண்போம்

இந்த பூஸ்டர் தடுப்பூசி சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், மற்றும் 60 வயதைத் தாண்டி இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.   தவிர 45 வயதைத் தாண்டி இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இணை நோய்கள் என்பது

இதய நோய் காரணமாகக் கடந்த ஒரு வருடத்துக்குள் சிக்கை பெற்றவர்கள்

தீவிர இதய நோய் உள்ளவர்கள்

இதயம் இயங்குவதில் பாதிப்பு அடைந்து கருவி வைத்திருப்போர்

உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவோம்

10 ஆண்டுகளுக்கு மேல் உயர் அழுத்தம் அல்லது நீரிழிவு நோயால் சிகிச்சை பெறுவோர்

சிறுநீரகம்  பழுதடநிது டயாலிசிஸ் செய்து கொள்வோர்

புற்று நோய் காரணமாக 2020 ஜூலைக்குப் பிறகு சிகிச்சை பெறுவோர்

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்ட தகுதி உள்ளோர் அரசின் கோவின் செயலி மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த செயலியில் ஏற்கனவே தகுதியானவர்கள் குறித்த விவரம் உள்ளதால் இது சுலபமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது

இந்த பூஸ்டர் தடுப்பூசி  போட்டுக் கொள்வோர் வயதுச் சான்றிதழ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் இருந்து பெற்ற சான்றிதழை அளிக்க வேண்டும்.  மருத்துவர் சான்றிதழ் இல்லாத இணை நோய் உள்ளவர்களால் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ள முடியாது.

இந்த பூஸ்டர் டோஸுக்கு அனுமதிக்க இரண்டாம் டோஸ் போட்டு 9 முதல் 12 மாதங்கள் ஆகி இருக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூஸ்டர் டோஸ் என்பது தனியான மருந்து அல்ல எனவும் ஏற்கனவே போடப்படும் ஊசியே மூன்றாம் தவணையாகப் போடப்படும் எனவும் கூறப்படுகிறது.  இது குறித்து அதிகாரப் பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை என்றாலும் அரசு இரு மருந்துகளைக் கலந்து பூஸ்டர் டோசாக அளிக்க உள்ளதாகவும்  அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது,