கூட்டணி குறித்து தேர்தல் நேரத்திலேயே முடிவு! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:

திமுக எந்த கட்சியுன் கூட்டணி சேரும் என்பது தேர்தல் நேரத்திலேயே முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம் என்று கூறினார்.

அப்போது செய்தியாளர்கள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் என்று ஸ்டாலின் கூறி உள்ளாரே என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர்,  2021ல் தான்  தமிழகசட்டமன்ற தேர்தல் வரும் என்று உறுதிப்பட கூறினார்., நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என ஸ்டாலின் எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார் என்று கிண்டலடித்த அமைச்சர், அதிமுக ஆட்சி மீது புழுதிவாரி தூற்ற வேண்டும் என்பதே கமலின் ஒரே எண்ணம் எனவும் குறி்ப்பிட்டார்.

மேலும்,  திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை பரப்பினால் குழந்தைகள் நல்லவர்களாக வருவார்கள்  என்றும், திரைப்படங்கள் மூலம் எம்ஜிஆர் நல்ல கருத்துக்களை பரப்பினார், ஆனால் இப்போது டாடி, மம்மி வீட்டில் இல்லை என பாடுகிறார்கள் என்றார்.

யார் பலமானவர்கள், பலவீனமானவர்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்ற  அமைச்சர் தேர்தல் நேரத்திலேயே கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என்றும் கூறினார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Election time only announce admk alliance, says Minister Jayakumar, கூட்டணி குறித்து தேர்தல் நேரத்திலேயே முடிவு! அமைச்சர் ஜெயக்குமார்
-=-