டெல்லி: சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை இந்திய தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளதாக, ஆளுநருக்கு தெரிவித்து உள்ளது.. இதனால் ஜார்கண்டில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய முதல்வராக தேர்வு செய்யப்படப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜார்க்கண்ட்  மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம் கட்சி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. அங்குள்ள சட்ட மன்றத்தில்  ஜேஎம்எம் கட்சிக்க்கு 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும்  காங்கிரஸ் 18; ஆர்ஜேடி, இடதுசாரிகள் 2 ; பாஜக கூட்டணிக்கு 31 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன், சுரங்க ஒதுக்கீடு பெற்றார். அவர் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சுரங்க உரிமம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக முதல்வர் ஹேமந்த் சோரன் செயல்பட்டிருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்திலும் பாஜக புகார் செய்துள்ளது. இதுதொடர்பான விசாரணையில் ஹேமந்த் சோரன் சுரங்க ஒதுக்கீடு பெற்றது உறுதியானது. இதில் ரூ.100 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை, சிபிஐ விசாரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் , ஜார்க்கண்ட், பிஹார், டெல்லி, தமிழகம் எனப் பல்வேறு மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, முதல்வர் ஹேமந்த் சோரனின் மற்றொரு உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா, அவரது கூட்டாளி பச்சு யாதவ் ஆகியோர் ஏற்கெனவே அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். அவர்கள் இருவரும் கொடுத்த தகவல்களின் அடிப்படையில்  ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில், இருந்து  இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதை பார்த்த அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.  இதுதொடர்பாக, முதல்வர் ஹேமந்த் சோரனோ, பிரேம் பிரகாஷோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த பரபரப்பான சூழலில், சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதனால், ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியில் இருந்து விலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையில், அங்கு ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் கூட்டணி அரசை கவிழ்க்க முயற்சித்து வரம  பாஜக ஆளும் ஜே.எம்.எம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேரை பாஜக வளைத்துவிட்டதாகவும், மேலும் பலருக்கு வலைவீசி வருவதாகவும் கூறப்படுகிறது.

தகுதி நீக்கம் தொடர்பான நோட்டிஸ்: ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு மேலும் 10நாள் அவகாசம்…