திமுகவில் நடைபெற்று வரும் உள்கட்சி பிரச்சினை காரணமாக தற்போது சசிகலா அணியும் இரண்டாக பிரியும் சூழல் உருவாகிவிட்டது.

இதன் காரணமாக சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து விலக்கி வைக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக அதிமுகவில்  அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஆட்சியில் சசிகலா குடும்பத்தினர் தலையிடு காரணமாக முதல்வராக ஓபிஎஸ் தனியாக பிரிந்து வந்தார். அதுபோல தற்போது எடப்பாடிக்கும் ஏற்பட்டுள்ள தொல்லை காரணமாக  டிடிவி தினகரனுக்கு எதிராக பல்வேறு ரகசிய திட்டங்களை தீட்டி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதன் முதற்கட்டமாக, அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படலாம் என போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அதைத்தொடர்ந்து, மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தை தினகரன் கூட்டவிடாதவாறு திட்டம் தீட்டியுள்ளதாகவும்,  தினகரனை வரவிடாமல் செய்ய திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதைத்தொடர்ந்து கட்சியின் தொலைக்காட்சி நிறுவனமான  ஜெயா டிவி தலைமை அலுவலகம் மற்றும், கிண்டியில் உள்ள நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை அலுவலகத்தையும் கைப்பற்ற  எடப்பாடி பழனிச்சாமி  தலைமையிலான  அணி திட்டம் தீட்டி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதன் காரணமாக அதிமுக அணிகளில் மீண்டும் பதட்டமும், குழப்பமும் நிலவி வருகிறது…