2019ஆம் வருடம் நீட் தேர்வு இரண்டு முறையோ ஆன்லைனிலோ நடக்காது

டில்லி

ருடத்துக்கு இரு முறை நடக்க உள்ள நீட் தேர்வு 2019 ஆம் வருடம் இருமுறை நடக்காது எனவும் ஆன்லைனிலும் நடக்காது அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு நாடெங்கும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  இனி வருடத்துக்கு இருமுறை இந்த தேர்வு நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது.  மேலும் இந்த தேர்வு இனி ஆன்லைன் முறையில் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தது.

இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அதிருப்தியை தெரிவித்தது.  அந்நிறுவன அதிகாரி ஒருவர், “முன்பிருந்த நிலையை மாற்ற சுகாதாரத் துறை அமைச்சகம் விரும்பவில்லை.  அதனால் நீட் தேர்வை இரு முறை நடத்த வேண்டாம் எனவும் ஆன்லைன் முறையில் மாற்ற் வேண்டாம் எனவும் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறி உள்ளார்.

அதனால் 2019ஆம் வருடம் நீட் தேர்வு இருமுறை நடத்துவதையும் ஆன்லைனில் நடத்துவதையும் நிறுத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.   மேலும் அடுத்த வாரம் இது குறித்து கூட்டம் ஒன்று நடக்க உள்ளதாகவும் அப்போது இந்த முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
English Summary
During 2019 neet exam will not be conducted twice a year