காரைக்கால்

னிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள்  பிரவேசிக்கிறார்.  இதையொட்டி திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளன.  இந்த விழாவைக் காண வரும் பக்தர்களுக்குக் கோவில் நிர்வாகம் கட்டுப்பாட்டுக்களை அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில் “பக்தர்களுக்கு வரும் 19 ஆம் தேதி முதல் 25 வரையும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் தரிசனம் செய்ய முன்பதிவு கட்டாயம் ஆகும்.  பக்தர்கள் இலவச தரிசனம், சிறப்புத் தரிசனம், விரைவு தரிசனம் ஆகிய அனைத்துக்கும் தனித்தனியாக www.thirunallarutemple.org/sanipayarchi என்ற தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.  மேலும் இந்த டிக்கட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்திருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நீராட மற்றும் மதச் சடங்குகள் செய்ய அனுமதி இல்லை.   கோவிலுக்குள் வரும் பக்தர்கள் அவசியம் முகக் கவசம் அணிந்து அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.    சிறப்பு அர்ச்சனை உள்ளிட்டவை கிடையாது.  தரிசனத்துக்கு 10 வயதுக்குப்பட்டோருக்கும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கும் அனுமதி இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.