மத்திய அரசு தணிக்கையாளர் குடி போதையில் அலுவலகத்தில் ரகளை

சென்னை

த்திய தணிக்கத்துரை ஆடிட்டர் குடிபோதையில் அலுவலகத்தில் ரகளை செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் தணிக்கைத் துறை அலுவலகம் சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மதன் பிரசாத் என்பவர் தணிக்கையாளராக பணி புரிந்து வருகிறார். சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்த 52 வயதான மதன் பிரசாத்துக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்துள்ளது.

மதன் பிரசாத் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு அலுவலகம் சென்றுள்ளார். அங்கு குடிபோதையால் அலுவகலகத்தில் ரகளை செய்துள்ளார். அலுவலகத்தில் இருந்த காவலரால் இவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அலுவலகத்தில் உள்ளவர்கள் தேனாம்பேட்டை காவல் துறைக்கு புகர் அளித்துள்ளனர்.

புகாரை ஒட்டி தேனாம்பேட்டை காவல்நிலையத்தினர் மத்திய தணிக்கைத் துறை அலுவலகத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு குடிபோதையில் ரகளை செய்துக் கொண்டிருந்த தணிக்கையாளர் மதன் பிரசாதை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Drunken Central govt auditor arrested for creating trouble in office